காணொளி: ஆஸ்திரேலிய கடற்கரை துப்பாக்கிச் சூடு - இதுவரை தெரிய வந்தது என்ன?

காணொளி: ஆஸ்திரேலிய கடற்கரை துப்பாக்கிச் சூடு - இதுவரை தெரிய வந்தது என்ன?

ஆஸ்திரேலியாவின் போன்டை கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையை கொண்டாடுவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்திருந்ததாக காவல்துறை கூறுகிறது. அப்போது திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடந்தது. யூத சமூகத்தினரை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ் கூறுகிறது.

பிபிசியால் உறுதிப்படுத்தப்பட்ட காணொளியில் ஒரு சிறிய பாலத்திலிருந்து இரண்டு நபர்கள் துப்பாக்கியால் சுடுவதை பார்க்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து மக்கள் அலறியடித்து ஓடுவதையும் காண முடிந்தது.

இந்தத் தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் பிரிட்டனில் பிறந்த 41 வயதான ஒரு நபர் மற்றும் பிரெஞ்ச் குடிமகன் ஒருவரும் அடக்கம். இஸ்ரேலிய குடிமகன் ஒருவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுகின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு