தாலிபன்களின் புதிய சட்டங்கள்: பொது இடத்தில் பெண்களின் குரல்களுக்கு தடை - முழு விவரம்
"ஒழுக்கத்தை ஊக்குவிப்பதையும், தீயொழுக்கத்தை தடுப்பதையும்" நோக்கமாக கொண்டது என தாலிபன்கள் கூறும் புதிய சட்டங்கள் கடந்த வாரம் ஆப்கானிஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் வீடுகளுக்கு வெளியே முகங்களை காட்டுவதையும், பொதுவெளியில் சத்தமாக பேசுவதையும் இந்த சட்டங்கள் தடை செய்கின்றன.
இந்த புதிய சட்டங்களுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இது குறித்து தங்களின் கவலையையும் தெரிவித்துள்ளது.
இந்த சட்டங்கள் ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை இருண்டதாக மாற்றியுள்ளது என்று ஞாயிற்றுகிழமை ஐ.நாவின் மூத்த அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
தாலிபனின் அதிவுயர் தலைவர் ஹைபதுல்லா அகுந்ஸாடா இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



