கத்தார் 2022: ஜப்பான் நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?

காணொளிக் குறிப்பு, கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஜப்பான் நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தியது எப்பட
கத்தார் 2022: ஜப்பான் நான்கு முறை சாம்பியனான ஜெர்மனியை வீழ்த்தியது எப்படி?

டுகுமா அசானோ ஜப்பான் அணிக்கான இரண்டாவது கோலை அடித்தபோது, மைதானம் முழுவதும் சில நொடிகளுக்குச் சட்டென அமைதியானது.

தன்னுடைய முதல் போட்டியில் ஜெர்மனிக்கு எதிராகக் களமிறங்கிய ஜப்பான், ஜெர்மன் ரசிகர்களை அந்த கோலின் மூலமாகத் திகைக்க வைத்திருந்தது. ஆனால், ஜப்பானிய மக்களிடையே அந்த கோல் ஆஃப்சைட் இல்லை என்று உறுதியானவுடன் கரகோஷங்கள் பறந்தன.

ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கத்தத் தொடங்கினார்கள். கலீஃபா மைதானமே ஜப்பானிய ரசிகர்களின் உற்சாகக் கூச்சல்களால் நிறைந்திருந்தது. ஆட்டம் முடிந்திருக்கவில்லை. இருந்தாலும் என்னவோ அவர்களுடைய உள்ளத்தில் வெற்றி உறுதியாகிவிட்டது.

கத்தார் கால்பந்து உலகக் கோப்பை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: