கமலா ஹாரிஸ் உருவப் படத்தை விவசாய நிலத்தில் பிரமாண்டமாக உருவாக்கிய இத்தாலி கலைஞர்

காணொளிக் குறிப்பு, விளைநிலத்தில் கமலா ஹாரிஸின் பிரமாண்ட உருவப்படத்தை உருவாக்கிய கலைஞர்
கமலா ஹாரிஸ் உருவப் படத்தை விவசாய நிலத்தில் பிரமாண்டமாக உருவாக்கிய இத்தாலி கலைஞர்

கேம்பரின் எனும் இத்தாலிய கலைஞர் விவசாய நிலத்தில் கமலா ஹாரிஸின் உருவப் படத்தை பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்.

“கமலா ஹாரிஸ் கூறிய ஒரு விஷயம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 'நாம் சந்திக்கும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் நம்பிக்கைதான் ஊக்கம் அளிக்கிறது' என்பதே அது. அவர் மிகவும் நம்பிக்கை வாய்ந்த ஒரு பெண்மணி,” என்கிறார் இதை உருவாக்கிய டேரியோ கேம்பரின்.

"மிகக் குறுகிய காலம் மட்டுமே இருக்கும் வகையில் இதை வடிவமைத்துள்ளேன். அதிகளவு சூரிய வெளிச்சமோ, காற்றோ அல்லது நிலம் வறட்சியாக இருந்தாலோ சிறிது நேரத்திலேயே இந்த உருவப்படம் மறைந்துவிடும்."

ஆனால், "சில நேரங்களில் இது சில நாட்கள் அல்லது வாரங்கள்கூட நீடிக்கும். ஆனால், பல நேரங்களில் ஒரு மணிநேரத்திற்குள் மறைந்துவிடும்" என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)