You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: போருக்கு மத்தியில் கல்வியை தொடரும் இரட்டை சகோதரிகள்
சூடானைச் சேர்ந்த மகாரெம் என்ற சிறுமி தனது தலையில் குண்டின் ஒரு பகுதி பதிந்துள்ள நிலையிலும் கல்வியை தொடர்கிறார்.
கோர்டோஃபான் பகுதியில் எல்-ஒபைத் நகரில் இவர் படித்த பள்ளி தாக்குதலுக்கு இலக்கான போது அவர் காயமடைந்தார்.
2024-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 13 மாணவிகளும் ஒரு ஆசிரியரும் கொல்லப்பட்டனர்.
மகாரெமின் இரட்டைச் சகோதரியான இக்ரமுக்கும் பள்ளிக்குச் செல்வது எளிதாக இருக்கவில்லை
பள்ளி மீது நடந்த தாக்குதலில் பலியான அவரது ஆசிரியரின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, பல்கலைக்கழக்கத்தில் ஆங்கிலம் படித்து வருகிறார் இக்ரம்.
பிப்ரவரி 2025-இல் சூடான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வரும் வரை ஒன்றரை வருடத்திற்கும் மேலாக எல்-ஒபைத் நகர் துணை ராணுவப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
சண்டை ஓரளவு குறைந்திருந்தாலும் அங்கு கல்வியைத் தொடர்வதில் பல்வேறு சவால்கள் இருந்து வருகின்றன.
பல்வேறு பள்ளிகளும் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளன.
2023 முதல் நடைபெற்று வரும் மோதலால் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா புள்ளிவிவரம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு