'அனுதினமும் அச்சம்தான்' - அமெரிக்காவின் குடியேறிகள் பிரச்னை பற்றி பாடகி ஷகிரா கருத்து

'அனுதினமும் அச்சம்தான்' - அமெரிக்காவின் குடியேறிகள் பிரச்னை பற்றி பாடகி ஷகிரா கருத்து

அமெரிக்காவில் தீவிரமடைந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் பிரச்னை குறித்து பிபிசியிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார் பிரபல பாடகி ஷகிரா.

"ஒரு குடியேறியாக அமெரிக்காவில் அனுதினமும் அச்சத்துடனேயே வாழ வேண்டும். அவர்களும் மட்டுமின்றி அனைவருமே சமத்துவம் மற்றும் சுதந்திரத்துடன் நடத்தப்பட வேண்டும்.

அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல சக்தி வாய்ந்த நாடுகள் குடியேறிகளின் கடின உழைப்பால்தான் கட்டி எழுப்பப்பட்டுள்ளன," என்று அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு