க்ளோயி ஸாவ்: 'நான் மனிதனாக நடத்தப்பட வேண்டும்' - ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கூறுவது என்ன?
பன்முகத் தன்மை என்று வரும்போது ஹாலிவுட் எந்த இடத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள் என்ற கேள்வி ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் க்ளோயி ஸாவிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்:
"கேமரா முன்பு நாம் பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதாக நினைக்கிறேன். அது இன்னும் ஆழமாகவும் நுணுக்கமாகவும் இருப்பதுடன் தொடர்புடையது. குறிப்பிட்ட அளவில் பிரதிநிதித்துவம் பெறுவது மட்டுமல்ல, மாறாக அவர்கள் மனிதர்களாக அப்படியே இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரச்னை மீது கவனம் செலுத்தும் படங்களில் மட்டும் அவர்கள் இருக்க வேண்டாமே? அனைத்து வித படங்களிலும் அவர்கள் பங்கு பெற வேண்டும்தானே? அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்.
அப்படித்தான் நான் நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறேன். சீன பெண்ணாக மட்டுமல்ல, மனிதனாக நடத்தப்பட வேண்டும்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



