80 வயதிலும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் மூதாட்டி

காணொளிக் குறிப்பு, 80 வயதிலும் நீச்சலடிக்கும் பாட்டி
80 வயதிலும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் சாதிக்கும் மூதாட்டி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த ஜெயந்தி காலே சிறு வயது முதலே நீச்சலில் அதீத ஆர்வம் கொண்டவர். பல தடைகளையும் மீறி 80 வயதிலும் அவர் தொடர்ந்து நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

அவர் 100க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அவரது நான்கு மருமகள்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கூட நீச்சல் கற்றுக்கொடுத்துள்ளார். அவரைப் பார்த்து பல பெண்கள் ஊக்கமடைந்து நீச்சல் பயில ஆரம்பித்துள்ளனர்.

தான் கடந்து வந்த பாதையின் சுவாரஸ்யமான தருணங்களை ஜெயந்தி காலே விவரிப்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு