மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு - உள்நாட்டுப் போரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஆபத்தில் சிறுமிகள்

காணொளிக் குறிப்பு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: உள்நாட்டுப் போரால் பாலியல் வன்புணர்வு ஆபத்தில் சிறுமிகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு - உள்நாட்டுப் போரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் ஆபத்தில் சிறுமிகள்

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து கிளர்ச்சிக் குழுக்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுள் யாயாவும் ஒருவர்.

யாயா அங்கிருந்து எப்படியோ தப்பித்தார். இப்போது தன் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி வருகிறார்.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பல தசாப்தங்களாக வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. 2013-ஆம் ஆண்டில் இங்கு உள்நாட்டுப் போர் தொடங்கியது. இந்த தொடர்ச்சியான மோதலால் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நாட்டில், இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ளனர்.

இவர் தன் 11-வது வயதில் கிளர்ச்சி குழுவால் கடத்தப்பட்டவர்.

இவர் கிளர்ச்சிக் குழுவிலிருந்து தப்பித்து தன் வீட்டுக்குத் திரும்பினார். இப்போது தன் படிப்புச் செலவுக்காக ஆடுகளை விற்றுவருகிறார்.

சமீப காலமாக வெளிநாட்டு உதவி மற்றும் சூழலில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, குழந்தைகள் வாழ்வதற்கு மோசமான நாடுகளுள் ஒன்றாகவே கருதப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)