காணொளி: காருக்கு வழிவிடாத அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர்

காணொளிக் குறிப்பு,
காணொளி: காருக்கு வழிவிடாத அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய நபர்

தனது காருக்கு வழிவிடவில்லை என இளைஞர் ஒருவர் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கும் காட்சி இது.

நவம்பர் 19ஆம் தேதி தெலங்கானாவின் ராஜண்ணா சிரிசில்லா மாவட்டம் வல்லம்பட்லா அருகே இந்த சம்பவம் நடந்தது. வீடியோவில் அரசு பேருந்து ஓட்டுநர் தன்னை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுவதைக் காண முடிகிறது. மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் அந்த இளைஞரிடம் ஏன் ஓட்டுநரை தாக்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அரசு பேருந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடப்பதை எவ்வகையிலும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தாக்குதல் நடத்திய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு