You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் பதற்றம் - இஸ்லாமாபாத்தில் என்ன நடக்கிறது?
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அவரை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவரின் ஆதரவாளர்கள் நுழைவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இரவில் மோதல்கள் ஏற்பட்டன.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மூன்று வருட சிறைத் தண்டனையில் உள்ளார். ஆனால் அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.
2022ஆம் ஆண்டு அவர் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் அரசுக்கு எதிரான வலுவான குரலாக இருந்து வருகிறார்.
பிரதமராக இருந்த போது கிடைத்த பரிசுப் பொருட்களை விற்றது குறித்து அரசுக்கு முறையாக தெரியப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய அவர் 2018இல் பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ராணுவத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டிற்குப் பிறகு 2022இல் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அவர் வெளியேற்றப்பட்டார்.
இம்ரான் கான் ஆதரவாளர்களின் இறுதி இலக்கு மத்திய இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய நகர சதுக்கமான டி-சௌக் ஆகும். பாகிஸ்தானின் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட பல குறிப்பிடத்தக்க அரசாங்க கட்டிடங்களுக்கு அருகில் இந்த சதுக்கம் அமைந்துள்ளது.
சில சமயங்களில் ‘டெமாக்ரசி சௌக்’ (Democracy Chowk) என்று குறிப்பிடப்படும் இந்த சதுக்கம் பெரும்பாலும் அரசியல் பேரணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இது இரண்டு முக்கிய சாலைகளில் அமைந்துள்ளதால், ‘டி-சௌக்கில்’ நடத்தப்படும் பெரிய கூட்டங்கள், இஸ்லாமாபாத்தில் போக்குவரத்தை பல முறை முடக்கியுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)