இஸ்ரேல் தாக்குதலில் இறந்த கர்ப்பிணி வயிற்றில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட குழந்தையும் மரணம்
சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துபோன பெண்ணின் வயிற்றில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட குழந்தையும் சில நாட்களில் இறந்துவிட்டது. கடந்த சனிக்கிழமை இரவு ரஃபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சஃப்ரின் என்ற பெண்ணின் குடும்பம் நிலைகுலைந்தது. அவரது கணவர் மற்றும் மூன்று வயது குழந்தை கொல்லப்பட்ட நிலையில், கர்ப்பமாக இருந்த சஃப்ரின் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.
அவர் வயிற்றிலிருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் உயிருடன் மீட்டனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த இந்த குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தாய் சஃப்ரினுக்கு அருகேயே குழந்தை அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



