பழங்குடியினர் பாடல் மூலம் தங்கள் வாழ்வியலை ஆவணப்படுத்துவது எப்படி?

காணொளிக் குறிப்பு,
பழங்குடியினர் பாடல் மூலம் தங்கள் வாழ்வியலை ஆவணப்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் 36 விதமான பழங்குடிகள் வசிப்பதாகச் சொல்கிறார் பழங்குடியின சமூக செயற்பாட்டாளர் வீரப்பன். ஆதிநிலம் என்ற பெயரில் தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் இவர், வனமசோதாவின் அடிப்படையில் பழங்குடியின மக்களுக்கு பட்டாக்களைப் பெற்றுக் கொடுத்து, அவர்களின் நில உரிமையைப் பாதுகாக்க உதவும் இவர், இந்த மக்களின் மொழிகளுடன் அவர்கள் பாடும் பாடல்களையும் கற்றுக் கொண்டுள்ளார். இவர்களில் இருளர், குரும்பர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பழங்குடியினர் பயன்படுத்தும் பாடல்களில் திராவிட மொழிகளின் ஆதிக்கமே அதிகம் இருப்பதாகச் சொல்கிறார் வீரப்பன்.

பழங்குடி மக்களின் பாடல்கள், அவர்களின் உணர்வுகளை மட்டுமின்றி, வாழ்வியல் முறையையும் வெளிப்படுத்துவதாகச் சொல்கிறார் வீரப்பன். ஒவ்வொரு பழங்குடியின மக்களும் அவரவர் மொழி சார்ந்த பாடல்களை மட்டுமே அறிந்துள்ள நிலையில், இருளர், காடர், குரும்பர் என பல்வேறு பழங்குடி மக்களின் பாடல்களையும், அவற்றின் அர்த்தத்தையும் வீரப்பன் தெளிவாக விளக்குகிறார்.

தலைமுறை தலைமுறையாகப் பாடப்பட்டு வந்த இந்த பாடல்கள், காலமாற்றத்தில் காலமாகி காற்றில் கரைந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டுமென்பதற்காக, இந்தப் பாடல்களை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுக்க வலியுறுத்தி வருகிறார் வீரப்பன்.

பழங்குடி மக்களின் பாடல்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)