முழு சிகிச்சை கிடைக்காமல் ஜோர்டானில் இருந்து திரும்பி அனுப்பப்படும் காஸா குழந்தைகள்
காஸாவில் மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் சிலர் ஜோர்டானுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படி அங்கு சென்ற ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
னால் தொடர் மருத்துவர் கவனம் தேவைப்படும் என பெற்றோர்கள் கூறிய போதும், பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக ஜோர்டானிலிருந்து அவர்கள் காஸாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை வழங்காமலேயே திருப்பி அனுப்பப்படுவதாக அவரது தாய் கூறுகிறார்.
போர் சூழலில், நோயுற்ற குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லாத முகாம்களில் தங்குவது அவர்களின் உயிருக்கு ஆபத்தாக இருக்கலாம் என்று பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.
ஜோர்டான் அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது, சிகிச்சை அளித்த பின் மீண்டும் காஸாவுக்கு அனுப்புவது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது என்றும் கூறுகிறது.
இது குறித்த முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



