இந்தியா பாகிஸ்தான் மோதல் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
இந்தியா பாகிஸ்தான் மோதல் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது என்ன?

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மே 7 அதிகாலையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகிக்கும் காஷ்மீரியில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளதால் நிலைமை மேலும் மோசம் அடைந்துள்ளது.

இந்த சூழலில், இரு நாட்டினரும் தற்போதுள்ள பிரச்னையை சமாளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று உலகத்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இது தொடர்பாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார். இரு நாட்டினருடன் நல்ல உறவில் இருப்பதாகவும், இந்த பதற்றமான சூழலை உடனடியாக அவர்கள் நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.