You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் ஆட்சி மாற்றம்- என்ன நடக்கிறது மடகாஸ்கரில்?
நேபாளம், வங்கதேசத்தை தொடர்ந்து ஜென் Z தலைமுறையினரின் போராட்டத்தால் மற்றொரு நாட்டிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில் ஜென் Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்துக்கு பிறகு கேப்சாட் (CAPSAT) என்ற சிறப்பு ராணுவ பிரிவு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவை பதவி நீக்க எதிர்க்கட்சிகள் நடத்திய வாக்கெடுப்பிற்கு பின் 130-க்கு ஒன்று என்ற கணக்கில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை தலைநகர் அன்டானனாரிவோவில் இருந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொடிகளை அசைத்து கொண்டாடினர்.
இந்த தருணத்தில் சுதந்திரமாக உணர்வதாக கணக்காளராகப் பணிபுரியும் 24 வயதான ஜூவானா ரசோரிமனானா தெரிவித்தார்.
"முதலில், மடகாஸ்கரில் வசிக்கும் இளைஞராக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது சுதந்திரமாக இருக்கிறோம், வெற்றி பெற்றுள்ளோம், என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன், அவ்வளவுதான்." என்கிறார் ஜூவானா.
அதேபோல, விவரிக்க முடியாத அளவு மகிழ்ச்சியாக இருப்பதாக சுய தொழில் செய்யும் 41 வயதான பாவோலா ரகோடோமாகா ஜனாரிசன் கூறுகிறார்.
"இதை விவரிக்கவே முடியவில்லை. பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருந்தது முடிவடைந்து விட்டது எனக் கூறுகிறார்கள், நாங்கள் குணமடைந்துவிட்டோம். இது விவரிக்க முடியாததாக, மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது." என்கிறார் பாவோலா.
மடகாஸ்கரின் அரசமைப்பு நீதிமன்றம், கர்னல் ரான்ட்ரியனிரினாவை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளது.
அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ராஜோலினா இன்னும் பொறுப்பில் இருப்பதாகவும், இது "ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி" என்றும் கண்டனம் தெரிவித்தது.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு