தோழியின் பிரசவத்தின் போது ஆறுதலாக துணை நின்ற டால்பின் - கேமராவில் பதிவான நெகிழ்ச்சி காட்சி

தோழியின் பிரசவத்தின் போது ஆறுதலாக துணை நின்ற டால்பின் - கேமராவில் பதிவான நெகிழ்ச்சி காட்சி

சிகாகோவில் அமைந்திருக்கும் ப்ரூக்ஃபீல்ட் மிருகக் காட்சி சாலையில் உள்ளது 38 வயதான பாட்டில் நோஸ் டால்பின் ஆல்லி. கடந்த ஜூன் 7-ம் தேதி அன்று அதிகாலை இந்த டால்பின் குட்டி ஒன்றை ஈன்ற காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.

சிக்கலான காலகட்டத்தில் விலங்கினங்கள் ஒன்றுக்கொன்று உதவும் தன்மை கொண்டவை. குறிப்பாக பிரசவ காலங்களில் அவை நெருங்கிய பிணைப்பை வெளிப்படுத்து. ஆல்லி பிரசவிக்கும் போது அதன் அருகில் 43 வயதான மற்றொரு தாய் டால்பின் டபேக்கோ உடன் இருந்து ஆறுதல் அளித்த செய்தி பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு