You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேங்காய், மூங்கில், சுரைக்காயில் இசைக் கருவிகள் செய்து அசத்தும் பழங்குடிக் கலைஞர்
தேங்காய் இசைக்கருவியாக மாறும் தருணம் இது. ஆனால், தேங்காய் மட்டுமல்ல, இயற்கைப் பொருட்கள் மூலம் இசைக் கருவிகள் செய்து கேரளாவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்துள்ளார்.
பிரதானமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் இவர் தனக்குக் கிடைக்கும் நேரத்தில் இவற்றை உருவாக்கி வருகிறார். இந்த இசைக்கருவிகளை தயாரித்துக் கொடுப்பதற்கான ஆர்டர்களும் இவருக்குக் வருகின்றன, அதன்மூலம் சிறிது வருமானத்தையும் அவர் ஈட்டுகிறார்.
எட்டுக்கால் பூச்சி உருவாக்கும் நூலைக் கொண்டு வயலின் நரம்பை உருவாக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது.
இயற்கைப் பொருட்கள் மூலம் இசைக் கருவிகளை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு எப்படி வந்தத்து, அந்த இசைக்கருவிகளை எப்படி தயாரிக்கிறார் என்பதை விளக்குகிறார் இந்த காணொளியில்..
தயாரிப்பு, ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: விக்னேஷ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு