ரஷ்யா - அமெரிக்கா: 200 ஆண்டுக்கால உறவின் சுவாரஸ்ய தருணங்கள்

காணொளிக் குறிப்பு,
ரஷ்யா - அமெரிக்கா: 200 ஆண்டுக்கால உறவின் சுவாரஸ்ய தருணங்கள்

ரஷ்யா- அமெரிக்கா இடையேயான நிலையற்ற உறவு நவீன அரசியலை தீர்மானித்துள்ளது. ஆனால், இவ்விரு நாடுகளும் எப்போதும் எதிரிகளாக இருந்ததில்லை. 1809ஆம் ஆண்டு அப்போதைய ரஷ்யப் பேரரசுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே முதல் முறையாக அதிகாரப்பூர்வ ராஜ்ஜிய உறவு ஏற்பட்டது.

அந்த காலத்தில் ரஷ்யா அலாஸ்காவை ஆட்சி செய்தது, மேலும் இன்று கலிஃபோர்னியாக கருதப்படும் இடத்தில் உள்ள ஒரு குடியேற்றத்தில் அமெரிக்காவுடன் எல்லையையும் பகிர்ந்தது.

இரு நாடுகளுக்கும் இடையே வாணிபம் மலர்ந்தது – குறிப்பாக தோல் மற்றும் பொருட்கள் வர்த்தகத்தில்.

பின்னர், 1917-ல், ரஷ்யப் பேரரசு குழப்பத்தில் மூழ்கியது. போல்ஸெவிக்குகள் (Bolsheviks) அதிகாரத்தை கைப்பற்றி, உலகின் முதல் கம்யூனிஸ்ட் அரசை உருவாக்கினர்.

இதன் மூலம், சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் கம்யூனிசம் Vs மூலதனம் என்ற வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட எதிர்மறை வழிகளில் பயணிக்கத் தொடங்கின.

இது 20ஆம் நூற்றாண்டை முழுமையாக கட்டுப்படுத்திய ஒரு போட்டியின் தொடக்கமாக அமைந்தது.

இப்படி, 200 ஆண்டுகளுக்கு மேலான அவர்களுக்கு இடையேயான தனித்துவமான உறவின் சில முக்கியமான சுவாரஸ்யமான தருணங்களை இந்த காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு