'செகண்ட் ஹேண்ட் உடைகளால் என் திருமணத்தின் அடையாளம் மாறாது' - காணொளி

'செகண்ட் ஹேண்ட் உடைகளால் என் திருமணத்தின் அடையாளம் மாறாது' - காணொளி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனோலி மேத்தா, திருமணத்தின் போது பயன்படுத்திய டிசைனர் ஆடைகளை மறுவிற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார்.

திருமணங்களுக்காக வாங்கும் புதிய உடையை ஒரு முறை பயன்படுத்திய பிறகு, அதை பெரும்பாலும் பயன்படுத்தாமல் வீட்டில் வைத்திருக்கும் நிலையில், இந்த ஆடைகளை விற்பனை செய்து வருகிறார் அனோலி.

இவரின் கடையில் திருமணத்திற்காக ஆடைகளை வாடகைக்கும் வாங்கி பயன்படுத்த முடியும். புதிய ஆடைகளின் விலையில் இருந்து 50% குறைவாக விலையை நிர்ணயம் செய்துள்ளார் இவர்.

இப்படிச் செய்வதன் மூலம் நமது வளங்கள் காக்கப்படுகிறது. புதிது போல இருக்கும் இந்த ஆடைகளை திருமணத்திற்காக பயன்படுத்துவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்கிறார் ஆஸ்தா அரோரா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: