செர்பியா: நாடு தழுவிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக புது மணப்பெண் செய்த செயல்

செர்பியா: நாடு தழுவிய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக புது மணப்பெண் செய்த செயல்

செர்பியாவில் போராடும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, ஒரு பூங்கொத்தை தூக்கி எறிந்து, தனது திருமணத்தைக் கொண்டாடியுள்ளார் ஒரு மணமகள்.

செர்பியாவில் கடந்த நவம்பர் மாதம், ஒரு ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு போராட்டம் வெடித்தது. இப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக, மாணவர்கள் போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. செர்பியாவில் மிகப்பெரிய ஜனநாயக மாற்றங்கள் தேவை என மக்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். செர்பிய பிரதமர் மிலோஸ் வுசெவிக் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த விபத்து தொடர்பாக இதுவரை 13 பேர் மீது அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் நீதி கேட்டும், நாட்டில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்கள் தொடர்கின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)