காணொளி: தாய்லாந்தில் டிரெண்டாகும் பெண்களின் லெஸ்பியன் காதல் கதைகள்

காணொளி: தாய்லாந்தில் டிரெண்டாகும் பெண்களின் லெஸ்பியன் காதல் கதைகள்

பேங்காக் முதல் பொகோட்டா வரை, ஒரு டிவி ஜான்ரே அமைதியாக காதல் பற்றிய விதிகளை மாற்றி எழுதி வருகிறது. மேலும் அந்தக் காதல் கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவரும் பெண்களே.

லெஸ்பியன் அல்லது பெண்களின் காதல் கதைகளை மையமாகக் கொண்ட டிராமாக்கள் தாய்லாந்தில் மக்களின் ஆதரவை அபரிமிதமாகப் பெற்று வருகின்றன.

இது நிச்சயம் உலகளாவிய ஆர்வமாக மாறும் பாதையில் உள்ளது.

ஜி.ஏ.பி. தி சீரிஸ்: பிங்க் தியரி 2022இல் தாய்லாந்தின் முதல் வெற்றித் தொடராக மாறியதுடன், யூட்யூபில் விரைவாக 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வகை பொழுதுபோக்கு பல கோடி டாலர் மதிப்பிலான தொழிலாக வளர்ந்துள்ளது. இதன் எளிதில் அணுகக்கூடிய தன்மைதான், உலகளாவிய ஈர்ப்புக்குக் காரணம். பெரும்பாலான தொடர்கள், பல மொழிகளில் சப்டைட்டில்களுடன், நேரடியாக யூட்யூபில் வெளியிடப்படுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு