You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் பாணியை பின்பற்றிய விஷால்: வாக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டிய நட்சத்திரங்கள்
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மும்முரமாக நடைபெற்றது. சென்னையில் காலை முதலே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
நடிகர் அஜித், காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய உடனேயே திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார். தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவரும் நடிகருமான விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் பிற்பகலில் வாக்களித்தார்.
நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட விஜய், ரசிகர்கள் புடைசூழ காவல்துறை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிக்குச் சென்றடைந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, முதல்முறையாக விஜய் வாக்கு செலுத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
வாக்கு செலுத்துவது குறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் போலியான செய்தி ஒன்று உலா வருகிறது. ஆனால் நடிகர் விஜய் இதுவரை அதிகாரப்பூரவமாக எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)