காணொளி - பிரஷ் கொண்டு முதுகு சொரியும் மாடு

காணொளி - பிரஷ் கொண்டு முதுகு சொரியும் மாடு

ஆஸ்திரியாவில் மாடு ஒன்று பிரஷ் போன்ற ஒன்றை வைத்து முதுகைச் சொறியும் காட்சி இது.

13 வயதான வெரோனிகா என்று அழைக்கப்படும் இந்த 'ஸ்விஸ் ப்ரவுன்' மாடு இவ்வாறு செய்வதை பார்த்த ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு செய்ய அந்த பண்ணைக்கு சென்றனர்.

இந்த மாடு அடிவயிற்றுப் பகுதியில் உள்ள மென்மையான தோலைச் சொறிய, மழுங்கிய முனைக் கொண்ட குச்சியைப் பயன்படுத்துகிறது. இதுவே மேல் முதுகுப் பகுதியில் உள்ள தடிமனான தோலைச் சொறிய, துடைப்பத்தின் கடினமான நார்களைப் பயன்படுத்துகிறது.

இது, தனது உடலின் தேவைக்கு ஏற்ப, பயன்படுத்தும் கருவியின் தன்மைக்கும் உள்ள தொடர்பை அந்த மாடு நன்கு புரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு