'புதிய உருவம், புதிய உயரம்' - ஒரு திருநங்கை ஆசிரியரின் பயணம்

'புதிய உருவம், புதிய உயரம்' - ஒரு திருநங்கை ஆசிரியரின் பயணம்

ரியா அல்வேகர் தன்னுடய தைரியத்திற்காக திருநங்கை ஆசிரியராக அறியப்படுகிறார்.

இந்தச் சமூகத்தில் பிரவின் 28 ஆண்டுகளாக ஆணாக வாழ்ந்தார். அவர் ஆணாகப் பிறந்திருந்தாலும் அந்த உடலமைப்பினுள் ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தார்.

பெண்ணாக இருப்பது போன்ற உணர்வு அவருக்குள் எப்போதும் இருந்தது. உடலில் மாற்றங்கள் அதிகரிக்க ஆரம்பித்ததும் அந்த அசௌகரியம் தாங்க முடியாத அளவிற்குச் சென்றது.

இறுதியில் 2019ஆம் ஆண்டு, பிரவின் அனைத்து தடைகளையும் உடைத்து ரியாவாக மாறினார். தன்னுடைய உடல் மற்றும் சமூகத்துடன் பிரவின் போராட வேண்டியிருந்தது.

புதிய உருவத்தில் அவரது புதிய பயணத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: