ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி, காப்பாற்றிய பெண் போலீஸ் - காணொளி

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பயணி, காப்பாற்றிய பெண் போலீஸ் - காணொளி

ஓடும் ரயிலில் ஏற முயன்று விபத்துக்குள்ளாக இருந்தவரை ஒரு பெண் போலீஸ் அதிகாரி காப்பாற்றியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் லக்சர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறும் போது ஒரு பயணி தவறி விழுந்தார்.

அந்தப்பயணி சில அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டார்.

ரயில் நகரும்போது அந்தப் பயணி பதற்றத்தோடு மேலே எழும்ப முயன்றார்.

அப்போது பெண் போலீஸ் அதிகாரி உமா, சாதுர்யமாகச் செயல்பட்டு பயணியை காப்பாற்றினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)