காணொளி: பளு தூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற 7 மாத கர்ப்பிணி

காணொளி: பளு தூக்கும் போட்டியில் வெண்கலம் வென்ற 7 மாத கர்ப்பிணி

டெல்லி காவல்துறையில் பணிபுரியும் சோனிகா யாதவ்,, ஆந்திராவின் அமராவதியில் நடைபெற்ற அகில இந்திய போலீஸ் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, பளு தூக்குதலில் 84 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த வெண்கலப் பதக்கத்தை வெல்லும்போது, அவர் ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தது தான்.

"ஒவ்வொரு பிரசவமும் தனித்துவமானது, ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணின் உடலும் தனித்துவமானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட உடற்பயிற்சி காரணமாக, இதைச் செய்ய எனது உடல் ஒத்துழைத்தது. என் வாழ்நாள் முழுவதும், ஒரு விளையாட்டு வீராங்கனையாகவோ அல்லது தடகள வீராங்கனையாகவோ இருக்க விரும்புகிறேன்." என்கிறார் சோனிகா யாதவ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு