மக்கள் கூட்டத்தில் புகுந்த கார் - லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் நிகழ்ந்த பயங்கரம்

காணொளிக் குறிப்பு, லிவர்பூல் எஃப்சி அணிவகுப்பில் மக்கள் கூட்டத்தில் புகுந்த கார்
மக்கள் கூட்டத்தில் புகுந்த கார் - லிவர்பூல் வெற்றி அணிவகுப்பில் நிகழ்ந்த பயங்கரம்

எச்சரிக்கை: காணொளியின் உள்ளடக்கம் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

லிவர்பூல் கால்பந்து கிளப்பின் பிரீமியர் லீக் கோப்பை அணிவகுப்பில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 4 குழந்தைகள் காயமடைந்துள்ளதுள்ளனர்.

மேலும், 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கார் ஓட்டி வந்த 53 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டனின் லிவர்பூல் நகர மையத்தில் உள்ள வாட்டர் தெருவில் திங்கட்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு கார் ஒன்று மக்கள் மீது மோதியதாகவும், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயலாகக் கருதவில்லை எனவும் மெர்சிசைடு காவல்துறை தெரிவித்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு