'முதல்முறை இந்த வாகனத்தை ஓட்டியபோது மீண்டும் பிறந்தது போல் இருந்தது' - உயரம் குறைவான மனிதர்

'முதல்முறை இந்த வாகனத்தை ஓட்டியபோது மீண்டும் பிறந்தது போல் இருந்தது' - உயரம் குறைவான மனிதர்

இவர் குஜராத் மாநிலம் தஹேகம் எனும் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரேஷ். பல தடைகளுக்கு எதிராகப் போராடி, தனக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை இவர் வடிவமைத்திருக்கிறார்.

இந்த வாகனத்தை வடிவமைக்க சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் சுரேஷ் செலவழித்துள்ளார். இதில் தான் அக்கிராமத்தில் உள்ள தனது சிறிய கடைக்கு அவர் செல்கிறார். குறைவான உயரத்துடன் வாழ்வது எளிதானது அல்ல என்கிறார் அவர்.

எல்லா சவால்களையும் கடந்து சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதன் மூலம் அந்த நிறைவை உணர்கிறார் சுரேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)