புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - எவ்வாறு நடந்தது?

காணொளிக் குறிப்பு,
புது டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் - எவ்வாறு நடந்தது?

டெல்லியில் உள்ள புது டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர்.

புது டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் ரிது சக்சேனா, பிபிசி ஹிந்தியிடம் இறந்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தினார்.

சனிக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையத்தில் குவிந்ததைத் தொடர்ந்து, இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

''அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும்'' தனது அனுதாபங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)