உடல் எடை குறித்த எண்ணங்களை மாற்றும் பாகிஸ்தான் பெண்கள் - எப்படி?

காணொளிக் குறிப்பு, உடல் எடை குறித்த பொதுவான எண்ணங்களை மாற்றும் இரண்டு பாகிஸ்தான் பெண்கள் - காணொளி
உடல் எடை குறித்த எண்ணங்களை மாற்றும் பாகிஸ்தான் பெண்கள் - எப்படி?

பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு பிளஸ் சைஸ் எனப்படும் உடல் எடை அதிகமாக உள்ள பெண்கள் உடல் எடை சம்பந்தமான எண்ணங்களை மாற்றி வருகிறார்கள்.

சமூக வலைதள பிரபலமாக இருக்கும் இருவரும் தங்களது வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொண்ட கிண்டல்கள் பற்றியும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஷீலா சயித் கூறுகையில், “ஒருவரின் உடலில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதன் மேல்தான் அனைவரின் கவனமும் போகும். அது உங்களது எடை, நிறம் அல்லது உங்களது உயரமாகக் கூட இருக்கலாம். நீங்கள் உங்களை காதலிக்க ஆரம்பிக்காத வரை இந்த உலகம் உங்களை காதலிக்காது. மற்றவர்கள் என்னை காதலிப்பதற்கு காரணம் முதலில் நான் என்னை காதலிப்பதுதான் என்று கூறலாம்.” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பெண்கள் உடல் எடை குறித்த பொதுவான எண்ணங்களை எப்படி மாற்றுகிறார்கள்? - காணொளி

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)