You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பக்கவாதம் விரைந்து குணமாக ஏ.ஐ. மூலம் புதிய தீர்வு தந்த 17 வயது மாணவர்
17 வயதான அர்னாப் மஹர்ஷி, சமீபத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பிரதமரின் தேசிய சிறார் விருதை பெற்றார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் அளித்த பங்களிப்புக்காக அவர் இவ்விருதை பெற்றார். அர்னாப் மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகரில் வசித்துவருகிறார்.
பக்கவாத நோயாளிகளுக்காக ஏஐ சாஃப்ட்வேர் மற்றும் கையில் அணியக்கூடிய பேண்டை அர்னாப் உருவாக்கியுள்ளார். இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் பக்கவாதம் மற்றும் செரிப்ரல் பால்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வேகமாக குணமடைய உதவுகின்றன.
இந்த பேண்டை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆயின என்றும் FAIR Chance எனப்படும் சாஃப்ட்வேரை உருவாக்க ஆறு முதல் எட்டு மாதங்களாயின என்றும் அர்னாப் தெரிவித்தார்.
கையில் அணியும் பேண்டுக்கு இந்திய அரசிடமிருந்து காப்புரிமை பெற்றுள்ள அர்னாப், தான் கண்டுபிடித்துள்ள சாஃப்ட்வேருக்கு பதிப்புரிமையும் பெற்றுள்ளார்.
நோயாளிகள் பலரையும் இது சென்றடைய அரசின் ஆதரவு தேவை என அர்னாப் கூறுகிறார்.
அர்னாப் தற்போது 11-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் படித்து வருகிறார். வருங்காலத்தில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணிபுரிய அவர் விரும்புகிறார்.
செய்தியாளர்: ஸ்ரீகாந்த் பங்காளே
ஒளிப்பதிவு: கிரண் சகாளே
படத்தொகுப்பு: அரவிந்த் பரேகர்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு