பிரிட்டன் அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு - நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, பிரிட்டன் அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு - நடந்தது என்ன?
பிரிட்டன் அரசர் சார்லஸ் மீது முட்டை வீச்சு - நடந்தது என்ன?

யார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசி துணைவியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார். இருந்தபோதும், அந்த நேரத்தில் "இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது" என்று அந்த நபர் குரல் எழுப்பிக் கொண்டிருந்தார். நடந்த சம்பவம் குறித்து நார்த் யார்க்ஷயர் காவல்துறை கூறுகையில், "23 வயதான ஒரு நபர் பொது ஒழுங்கை மீறிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்றது.

அரசர் சார்லஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: