You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உங்கள் தொகுதி எம்பி பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தைத் தவிர தினசரி படி, அலுவலக வசதிகள், பயணச் செலவுகள், தங்குமிடம் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தற்போது தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள எம்.பி.களில் புதுமுகம், அனுபவம் வாய்ந்தவர்கள் எனப் பலர் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்.பிக்களின் அனுபவத்திற்கு ஏற்ப வீடு, ஓய்வூதியம் ஆகிய சலுகைகளை அரசு வழங்குகிறது.
ஒவ்வோர் ஆண்டும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யலாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சம். அத்துடன் எம்.பிகளுக்கு தினசரிப் படியாக நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.
நாடாளுமன்ற செயலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டால்தான் இந்த தினசரிப் படியைப் பெற முடியும்.
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும்போதும், நாடாளுமன்ற குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் உணவு மற்றும் பிற செலவுகளுக்காக இந்த தினசரிப் படி வழங்கப்படுகிறது.
எம்.பி-க்களின் ஊதியம், சலுகைகள் குறித்து இந்த காணொளியில் இடம்பெற்றுள்ள முழு விவரங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)