காணொளி: சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம் - கள நிலவரம் என்ன?

காணொளி: சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம் - கள நிலவரம் என்ன?

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகையில் நடத்தி வரும் போராட்டம் இன்றுடன் (ஆக. 13) 13-வது நாளை எட்டியுள்ளது. தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை.

சென்னை மாநகராட்சியில் ராயப்பேட்டை மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு இரவு, பகலாக போராடி வருகின்றனர். தனியார்வசம் சென்றால் தங்கள் சம்பளம் குறைக்கப்படலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? பிபிசி தமிழின் கள நிலவரம்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு