'ஹிரோஷிமா மனிதர்கள் உருவாக்கிய நரகம்' - அணுகுண்டு தாக்குதலில் தப்பியவர்கள் கூறியது என்ன?
(எச்சரிக்கை : இந்த காணொளியின் உள்ளடக்கம் சங்கடம் தரலாம்.)
1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 8 மணி 15 நிமிடங்களுக்கு, அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டை வீசியது.
மூன்று நாட்கள் கழித்து, ஜப்பானின் தெற்கில் உள்ள நாகசாகியிலும் குண்டு வீசப்பட்டது.
இது வரலாற்றில் போரின் போது அணுஆயுதம் பயன்படுத்தப்பட்ட ஒரே தருணமாகும்.
இப்போது, உலகின் பல பகுதிகளில் மோதல்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், அணுஆயுதப் போட்டி மற்றும் அதன் அபாயம் குறித்த பேச்சுகளும் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா பங்கெடுத்த ஓராண்டுக்குப் பின், 1941 டிசம்பர் 7 அன்று ஜப்பான் விமானப்படை, ஹவாயில் உள்ள பெர்ல் ஹார்பர் கடற்படைத் தளத்தில் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 2,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர், அமெரிக்கா நியூ மெக்ஸிகோவில் ரகசியமாக, அணுக்கருப் பிளவைக் கொண்டு உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கும் பணியைத் தொடங்கியது.
மூன்று ஆண்டுகள் கழித்து, ஜெர்மனி சரணடைந்தபின், போரை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையை ஜப்பான் நிராகரித்தது. இதனையடுத்து அமெரிக்கா ஹிரோஷிமா நகரின் மீது ஒரு பரிசோதனை அணுகுண்டை வீசியது.
ஹிரோஷிமாவில் வசித்து வந்த மூன்றரை லட்ச மக்களில் சுமார் 78,000 பேர் அந்த கணமே கொல்லப்பட்டனர்.
மூன்று நாட்கள் கழித்து, அமெரிக்கா நாகசாகி நகரில் இரண்டாவது குண்டை வீசியது. இதனால் அங்கு வசித்து வந்த 2 லட்சத்து 40 ஆயிரம் மக்களில் சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
பின்னர் ஜப்பான் சரணடைந்தது, இதனால் ஆசியாவில் போர் முடிவுக்கு வந்தது.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



