இரான் மீது தாக்குதல் நடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

காணொளிக் குறிப்பு, இரான் மீது தாக்குதல் நடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்
இரான் மீது தாக்குதல் நடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

"இரான் சிறந்த நாடாக இருக்கலாம் அதனிடம் அணு ஆயுதம் இல்லாத வரை. அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால், சிறந்த நாடாக இருக்க முடியாது. அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்காது." என்று வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

"நேற்று நீங்கள் இரான் பற்றிய ஒரு முடிவை விரைவாக எடுப்பதாகக் கூறினீர்கள். அதன் பொருள் என்ன? இரானை தாக்கும் முடிவு ஏதேனும் உள்ளதா?" என நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

"பிரச்னையை விரைவாகத் தீர்க்க வேண்டுமா? நம்முடன் ஒப்பந்தத்தில் ஈடுபட இரான் விரும்புகிறது. ஆனால், அது எப்படிச் செய்வதென அவர்களுக்கு தெரியவில்லை. உண்மையாகவே அவர்களுக்கு அது தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை இரானுடன் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. மற்றொரு பேச்சுவார்த்தை வரும் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளி மிக நீண்டதாக உள்ளது. எனவே அவர்கள் நம் நேரத்தை வீணடிப்பதை போலத் தோன்றுகிறது.

இரான் அணுஆயுதம் என்ற கருத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். அவர்கள் அணுஆயுதம் வைத்திருக்க முடியாது. இவர் அணுஆயுதம் வைத்திருக்க கூடாது. யாரும் வைத்திருக்க கூடாது. யாரையும் அணுஆயுதங்கள் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது. நாமும் அணுஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது.

மிகவும் எளிமையான விஷயம். அது மிகவும் எளிதானது. அவர்கள் அணுஆயுதம் வைத்திருக்கக் கூடாது. அவர்கள் வேகமாகச் செயல்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அணுஆயுதம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். ஆனால், இரானால் அதை அடைய முடியாது. கடுமையாகச் செயல்பட வேண்டியிருந்தால், அதை நிச்சயம் செய்வேன். அதை நம் நலனுக்காக இல்லாமல், உலக நலனுக்காகச் செய்வேன்." என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு