சபரிமலை: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பது ஏன்?

காணொளிக் குறிப்பு, சபரிமலை: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பது ஏன்?
சபரிமலை: பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை இருப்பது ஏன்?

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காணொளிகளும்; அரசை கண்டித்து கோஷம் எழுப்பிய நிகழ்வும் சமீபத்தில் நடந்தது? சபரிமலையில் என்ன பிரச்னை?

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கார்த்திகை, மார்கழி மாதங்களில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவதுண்டு.

மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இந்த முறை அபரிமிதமாக அதிகரித்துள்ளது.

தினசரி 88 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு வருவதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)