குழந்தை கடத்தலால் 21 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குடும்பம்: டிக்டாக் மூலம் இணைந்த சகோதரிகள்
குழந்தை கடத்தலால் 21 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த குடும்பம்: டிக்டாக் மூலம் இணைந்த சகோதரிகள்
ஜார்ஜியாவில் 21 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை கடத்தலால் பிறந்தபோதே பிரிக்கப்பட்டு, வெவ்வேறு இடங்களில் விற்கப்பட்ட இரட்டை சகோதரிகள் சந்தித்துக்கொண்ட தருணம் இது.
டிக்டாக் வீடியோ மூலமாக இணைந்த ஏமி, ஆனா ஆகிய இருவரும் முகநூல் குழு மூலம் தங்களது தாயையும் கண்டுபிடித்து அவருடனும் இணைந்துள்ளனர்.
தமுனா என்ற பத்திரிகையாளர் இதுபோன்ற நூற்றுக்கணக்கான குடும்பங்களை இணைத்துள்ளார். ஆனால், இன்று வரை அவரது சொந்த தாயை அவரால் கண்டறிய முடியவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



