இஸ்ரேல் - ஹமாஸ் சண்டைக்கு நடுவே மருத்துவமனையில் சேவை புரியும் 13 வயது சிறுவன்
இஸ்ரேல் - ஹமாஸ் சண்டைக்கு நடுவே மருத்துவமனையில் சேவை புரியும் 13 வயது சிறுவன்
தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் நகரை இஸ்ரேல் படைகள் சுற்றி வளைத்து தாக்கி வருகின்றன. இஸ்ரேல் - ஹமாஸ் சண்டைக்கு நடுவே இந்த 13 வயது சிறுவன் தன்னார்வலராக அங்குள்ள ஐரோப்பிய காஸா மருத்துவமனையில் மருந்து பொருட்களை விநியோகிக்க தன் தாய்க்கு உதவுகிறான்.
இந்த சிறுவனின் தாயார் நான்சி ஃபாஸ்ஃபோஸ் அதே மருத்துவமனையில் மருந்துகள் விநியோக பிரிவில் மருத்துவராக இருக்கிறார். போர் தீவிரமடைந்ததால், மருத்துவமனைக்குள்ளேயே தன் குழந்தைகளுடன் அவர் தங்கிவருகிறார்.
மருத்துவப் பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், மருந்து பொருட்களை உரிய நேரத்தில் விநியோகிப்பதற்காக 13 வயது யாசன் ஃபாஸ்ஃபோஸ் தன் தாய்க்கு உதவிவருகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



