மொசாம்பிக்கில் வன்முறை - மலாவிக்கு இடம் பெயர்ந்த மக்கள் உணவின்றி தவிப்பு

காணொளிக் குறிப்பு, மலாவியில் உண்ண உணவின்றி தவிக்கும் மொசாம்பிக் மக்கள்... தேர்தல் வன்முறையால் இடம் பெயர்ந்தவர்களின் நிலை என்ன?
மொசாம்பிக்கில் வன்முறை - மலாவிக்கு இடம் பெயர்ந்த மக்கள் உணவின்றி தவிப்பு

மொசாம்பிக் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் போது 278 பேர் கொல்லப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள மலாவியில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையை கையாளுவது எப்படி என்று சிந்தித்து வருகின்றனர் மலாவி அதிகாரிகள்.

உண்ண உணவும், போதுமான அடிப்படை வசதிகள் இன்றியும் மொசாம்பிக் மக்கள் தவிப்பது ஏன்? முழு விபரம் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)