காணொளி: படகின் முன் நின்று நடனம் - உலகப் பிரபலமான 11 வயது சிறுவன்

காணொளிக் குறிப்பு, 11 வயது சிறுவனால் மேலும் பிரபலமான படகு போட்டி
காணொளி: படகின் முன் நின்று நடனம் - உலகப் பிரபலமான 11 வயது சிறுவன்

படகு போட்டியின்போது படகின் முன்பு சிறுவன் நின்றுகொண்டு நடனமாடும் இந்த காணொளி ஞாபகம் இருக்கிறதா?

ஆம். சமீபத்தில் பிரபலமான ஆரா ஃபார்மிங் (Aura Farming) ட்ரெண்ட் இது.

சமூக வலைதளங்களில் நிறைய ரீல்ஸ்களில் நீங்கள் இந்த சிறுவன் நடனம் ஆடுவதை பாத்திருப்பீர்கள். 11 வயதான இந்தோனீசிய சிறுவன் ரயான் அர்கன் திக்கா ஆடும் காணொளி வைரல் ஆகி அவரை பிரபலம் ஆக்கியது.

தற்போது இந்தோனீசியாவில் நடக்கும் பாக்கு ஜலூர் படகு போட்டிகளில் இவ்வாறு நடனம் ஆடும் மற்ற சிறுவர்களை பார்க்க கூட்டம் கூடுகிறது. இந்த ஆண்டு நடந்த போட்டியில் சுமார் ஒரு லட்சம் பேர் கூடியதாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

"பாக்கு ஜலூர் அனைத்து இடங்களிலும் வைரலாகி வருகிறது. எனவே, நான் இந்த விழாவைப் பார்க்க வந்திருக்கிறேன். இப்போது இந்த குழந்தைகளின் வைரல் நடனம் இந்த விழாவுக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வருமா என்பதை பார்க்கவேண்டும்." என்றார் டியா பார்வையாளர் எல்ஃபானி புத்ரி.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு