ஹாங்காங் மகிமை பாடலுக்குத் தடை - போராட்டத்தைத் தூண்டும் ஆயுதமாக இருந்ததா?
ஹாங்காங்கிற்கு மகிமை என்ற பாடல் ஹாங்காங்கில் தடை செய்யப்பட்டுள்ளது. போராட்டங்களைத் தூண்டும் ஆயுதமாக இந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதி, ஆனால், தன்னாட்சி அதிகாரம் கொண்டது.
சீனா தன்னாட்சியைப் பலவீனப்படுத்துவதாக போராட்டக்காரர்கள் நம்புகின்றனர். இந்தப் பாடல் 2019இல் நடந்த ஜனநாயக ஆதரவுப் போராட்டங்களின்போது உருவானது.
சிலருக்கு இந்தப் பாடல் ஒரு ஹாங்காங்வாசியாக அவர்களின் அடையாளம். கடந்த ஆண்டு இந்தப் பாடலைத் தடை செய்யும் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
“இந்தப் பாடலை மக்கள் முன் பாடுவது, இசைப்பது, ஒளிபரப்புவது, அச்சிடுவது, வெளியிடுவது, விற்பனை செய்வது, விநியோகிப்பது, பரப்புவது, காட்சிப்படுத்துவது அல்லது பாடலை மீண்டும் உருவாக்குவது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும்'' என்று ஹாங்காங் மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



