காணொளி: நவீன சூட்டை வடிவமைத்த டிசைனர் காலமானார்
காணொளி: நவீன சூட்டை வடிவமைத்த டிசைனர் காலமானார்
இத்தாலிய புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஜியோர்ஜியோ அர்மானி 91 வயதில் காலமானார்.
இவர், நவீன சூட்டை வடிவமைத்து புகழ்பெற்றவர்.
ஆண்கள் உடையில் Soft tailoring முறையை அர்மானி அறிமுகப்படுத்தினார். பெண்களுக்கான சூட்டை பிரபலப்படுத்தியவரும் இவர்தான்.
எடை குறைந்த மாடல்களை ஃபேஷன் ஷோ மேடையில் பங்கேற்க தடை செய்தவரும் இவரே.
இவரது நிறுவனம் ஆண்டுக்கு 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் வருமானம் ஈட்டுகிறது.
அர்மானி தன் கருத்துகள் காரணமாகவும், சீனாவில் இவரது நிறுவனம் உழைப்புச் சுரண்டலுடன் தொடர்புடையதாக நடத்தப்பட்ட விசாரணை காரணமாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



