வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டுகள்: நாசா ஆதாரத்தைத் தேடுகிறதா?

காணொளிக் குறிப்பு, வேற்றுகிரகவாசிகள், பறக்கும் தட்டுகள்: நாசா ஆதாரத்தைத் தேடுகிறதா?

நாம் அனைவருமே யு.எஃப்.ஒ என்கிற பறக்கும் தட்டு குறித்துக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், அப்படியென்றால் என்ன?

இந்த விசித்திரமான பறக்கும் தட்டுகளின் பின்னணியைக் கண்டறிய நாசா முயல்கிறது. ஆனால், அப்படிக் கண்டறிந்து அதிலிருப்பது சிறிய பச்சை மனிதன் எனச் சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

உலகம் முழுக்கவுள்ள மக்களால் யு.எஃப்.ஒ என்றழைக்கப்படும் இத்தகைய ஆயிரக்கணக்கான பொருட்களைக் கண்காணிக்க ஒரு குழுவை நாசா உருவாக்கியுள்ளது.

நாசா இப்போது ஏன் பறக்கும் தட்டுகளைக் கண்காணிக்கிறது? நாசா வேற்று கிரகவாசிகளுக்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்கப் போகிறதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: