ஜெயலலிதாவின் மறைவால் ஏற்படும் வெற்றிடத்தை தேசியக் கட்சிகளால் பிடிக்க முடியாது - ஞாநி
சுமார் 30 ஆண்டுகாலம் தமிழக அரசியலில் ஒரு பெரும் ஆளுமையாக இருந்த ஜெயலலிதாவின் மறைந்துள்ள நிலையில், அவரது மறைவால் அஇஅதிமுக உடனடியாக உடையும் சாத்தியக்கூறு இல்லை என்கிறார் அரசியல் ஆய்வாளர் ஞாநி.
ஆட்சிக்கு இன்னும் சுமார் நான்காண்டுகள் இருக்கின்றன என்னும் நிலையில் , இந்த ஆட்சி கவிழ்ந்தால் அது திமுகவுக்குத்தான் லாபம் என்ற யதார்த்தம் இருப்பதால், அதை அதிமுகவினரோ அல்லது மத்தியில் ஆளும் பாஜகவோ விரும்பாது என்று பிபிசி தமிழோசையிடம் பேசிய ஞாநி கூறினார்.
மேலும் ஜெயலலிதாவின் இறப்பால் ஏற்படக்கூடிய அரசியல் வெற்றிடத்தை பாஜக, அல்லது காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளோ அல்லது பிற சிறிய உதிரிக்கட்சிகளோ நிரப்பக்கூடிய சாத்தியமும் இல்லை என்றார் ஞாநி.
இத்தகைய ஒரு அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, தேவையான சக்திவாய்ந்த தலைவர்கள் தேசிய கட்சிகளிடம் இல்லை என்று ஞாநி கூறினார்.