நன்றி!
மான்செஸ்டரில் நடந்த இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2019 உலகக்கோப்பை போட்டி குறித்த நடப்புகளை நேரலையாக பிபிசி தமிழுடன் இணைந்திருந்து அறிந்ததற்கு நன்றி! வணக்கம்!
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 268 ரன்கள் குவித்த போதிலும், அணியின் பெரும் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றது பந்துவீச்சாளர்களே.
மான்செஸ்டரில் நடந்த இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2019 உலகக்கோப்பை போட்டி குறித்த நடப்புகளை நேரலையாக பிபிசி தமிழுடன் இணைந்திருந்து அறிந்ததற்கு நன்றி! வணக்கம்!
269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா, சாஹல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இதுவரை நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாத அணி என்ற பெருமையை இந்தியா தக்க வைத்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 268 ரன்கள் குவித்த போதிலும், அணியின் பெரும் வெற்றிக்கு பெரிதும் துணை நின்றது பந்துவீச்சாளர்களே. ஷமி, பும்ரா, பாண்ட்யா மட்டுமன்றி சுழல் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினர்.
இந்திய பந்துவீச்சாளர்களை தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
தான் வீசிய 6 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த பும்ரா, 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல் மத்திய ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய சாஹல், மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டரின் விக்கெட்டை எடுத்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன்கள் பிராத்வெயிட் மற்றும் அலன் ஆகியோரின் விக்கெட்டை பும்ரா தனது பந்துவீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார்.
6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய சுழல்பந்துவீச்சாளர் சாஹல் பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் நிக்கல்ஸ் பூரான் 28 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் தொடக்கவீரர் சுனில் அம்பிரிஸின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார்.
மான்செஸ்டரில் இந்திய அணியின் 269 என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துவரும் மேற்கிந்திய தீவுகள் அணியை, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு திணறடித்து வருகிறது.
இரண்டு விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்தியத்தீவுகள் ரன்குவிப்பில் பெரிதும் தடுமாறி வருகிறது. 15 ஓவர்களின் முடிவில் அந்த அணி 50 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்தியதீவுகள் அணியின் விக்கெட்கீப்பர் ஹோப் முகமது ஷமியின் பந்துவீச்சில் போல்டானார்.
அதிரடி தொடக்க வீரர் கிறிஸ் கெயில் முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு மேற்கிந்தியதீவுகள் அணி 10 ரன்கள் எடுத்துள்ளது.
பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த மான்செஸ்டர் ஆடுகளத்தில், முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்துள்ளது.
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா, தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இணையின் அதிரடி ஆட்டத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது.
5 பவுண்டர்களின் உதவியுடன் 38 பந்துகளில் பாண்ட்யா 46 ரன்கள் எடுத்தார்.
மறுமுனையில் பொறுமையாக விளையாடிய தோனி கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். இறுதி ஓவரில் அவர் விளாசிய இரண்டு சிக்ஸர்கள் இந்தியா 268 ரன்கள் எடுக்க பெரிதும் உதவியது.
61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய வேகப்பந்துவீச்சாளர் கேமர் ரோச் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்துவீச்சை 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா, தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா இணையின் அதிரடி ஆட்டத்தால் 250 ரன்களை எடுத்தது. 38 பந்துகளில் பாண்ட்யா 46 ரன்கள் எடுத்தார்.
தோனி 20 ரன்களுடன், ஹர்திக் பாண்ட்யா 17 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். 8 ஓவர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்தியா 250 ரன்கள் எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
4 விக்கெட்டுகளை இழந்த இந்தியாவின் ரன்குவிப்பை அதிகரிக்கும் பணியில் கேப்டன் கோலியும், முன்னாள் கேப்டன் தோனியும் ஈடுபட்டுள்ளனர். 37 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 174 ரன்களை எடுத்துள்ளது.
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்த போதிலும், மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வரும் அணித்தலைவர் விராட் கோலி அரைசதம் எடுத்துள்ளார்.
கேமர் ரோச் வீசிய 27-வது ஓவரில் விக்கெட்கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து விஜய்சங்கர் ஆட்டமிழந்தார் இது கேமர் ரோச் எடுத்த இரண்டாவது விக்கெட் ஆகும். 27 ஓவர்களின் முடிவில், இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 20.4 ஓவர்களில் தனது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் 48 ரன்கள் எடுத்த கே. எல். ராகுல் ஆட்டமிழந்தார். 21 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 98 ரன்கள் குவித்துள்ளது.