You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தேர்தல் முடிவுகள்: மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கும் பாஜக, ஹரியாணாவில் இழுபறி

இந்தியாவின் மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கு அக்டோபர் 21 அன்று நடந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. ஹரியாணாவில் நீடிக்கும் இழுபறி

    ஹரியாணாவில் பாஜக 39 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலை வகிப்பதால் அம்மாநிலத்தில் கடும் இழுபறி நீடிக்கிறது. இரண்டு பிரதான கட்சிகளை தவிர்த்து, மீதமுள்ள 19 தொகுதிகளில் உள்ளூர் கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.

    இவற்றில் சில தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

  2. மகாராஷ்டிரா - தற்போதைய நிலவரம் என்ன?

    மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி 161 இடங்களிலிலும், காங்கிரஸ் கூட்டணி 98 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

  3. கேரளா: இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றி, பிற்பகல் 2 மணி நிலவரம்

    கேரளாவில் ஐந்து இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு தொகுதியில் வென்றுள்ளது.

    இதர மூன்று தொகுதிகளில், காங்கிரஸ் இரண்டு தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. ,

  4. ஹரியாணா: பாஜகவுக்கும் காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி, பிற்பகல் 2 மணி நிலவரம்

    பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    ஹரியாணாவில் காங்கிரசை விடவும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக முன்னிலை வகிப்பதால் இழுபறியாக உள்ளது.

  5. மகாராஷ்டிராவில் 100 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை, பிற்பகல் 2 மணி

    பிற்பகல் 2 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 161 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களிலும், பிற கட்சிகள் 27 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    தொடக்கத்தில் இருந்ததைவிட காங்கிரஸ் முன்னிலை பெறும் தொகுதிகள் அதிகரித்து வருகின்றன.

  6. ஹரியாணாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸூக்கு வாய்ப்பு, ஹரியாணாவின் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா கருத்து

    ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் கட்சிகளையும், சுயேச்சைகளையும் சேர்த்து வலுவான அரசு அமைக்கும் சந்தர்ப்பம் காங்கிரஸூக்கு கிடைத்துள்ளது என்று ஹரியாணாவின் முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா கருத்து தெரிவித்துள்ளார்.

  7. மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம், பிற்பகல் 1 மணி

    பிற்பகல் 1 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 166 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும், பிற கட்சிகள் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  8. ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம், பிறிபகல் 1 மணி நிலவரம்

    மதியம் 1 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக 36 இடங்களிலும், காங்கிரஸ் 34 இடங்களிலும், பிற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    ஹரியாணாவில் காங்கிரசை விடவும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக முன்னிலை வகிப்பதால் இழுபறியாக உள்ளது.

  9. கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம், மதியம் 1 மணி நிலவரம்

    கேரளாவில் ஐந்து இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ள நிலையில் ஒரு தொகுதியில் முன்னலை வகிக்கிறது.

    காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது,

  10. குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்

    குஜராத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவும் காங்கிரஸூம் தலா மூன்று இடங்களில் முன்னிலையில் உள்ளன.

  11. பஞ்சாப் சட்டமன்ற இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம், காங்கிரஸ் முன்னிலை

    பஞ்சாபில் நான்கு தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஷிரோன்மணி அகாலி தளம் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

  12. ஹரியாணா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம், பாஜக முன்னிலை

    காலை 12 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக 39 இடங்களிலும், காங்கிரஸ் 29 இடங்களிலும், பிற கட்சிகள் 22 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    ஹரியாணாவில் காங்கிரஸூக்கும் பாஜகவுக்கும் இடையில் இழுபறி நிலை இருந்து வருகிறது.

  13. மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவரம், பாஜக முன்னிலை

    காலை 12 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 167 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 90 இடங்களிலும், பிற கட்சிகள் 31 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  14. மக்களவை இடைத் தேர்தல் முன்னிலை நிலவரம்

    அக்டோபர் 21 அன்று பிகாரில் உள்ள சமஸ்திபூர் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள சத்தாரா ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது.

    சமஸ்திபூரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி கட்சி முன்னிலை வகிக்கிறது.

    சத்தாராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

  15. சிக்கிம் முதல்வர் வெற்றி

    சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் போக்ளோக் - காம்ரங் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் வென்றுள்ளார்.

    இவரது சிக்கிம் கிராந்தி மோர்ச்சா கட்சி பாஜகவின் கூட்டணி கட்சியாகும்.

    அவர் மீது ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டிருந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

    முன்னதாக அவர் ஓராண்டு காலம் சிறையில் கழித்தார்.

    பின்னர் அவர் போட்டியிட இருந்த தடைக் காலத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆறு ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்தால் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட்டார்.

  16. ஆதித்ய தாக்ரே முன்னிலை

    சிவசேனாவின் தாக்ரே குடும்பத்தில் இருந்து தேர்தல் அரசியலில் இறங்கிய முதல் நபரான பால் தாக்ரேவின் பேரனும், அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகனுமான ஆதித்ய தாக்ரே மும்பையில் உள்ள வோர்லி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

  17. மகாராஷ்டிரா முன்னிலை நிலவரம், பாஜக முன்னிலை

    காலை 11 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 163 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களிலும், பிற கட்சிகள் 33 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

  18. ஹரியாணா முன்னிலை நிலவரம்

    காலை 11 மணி நிலவரப்படி ஹரியாணாவில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், பிற கட்சிகள் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

    ஹரியாணாவில் காங்கிரசை விடவும் குறைவான தொகுதிகளிலேயே பாஜக முன்னிலை வகிப்பதால் இழுபறியாக உள்ளது.

  19. உத்தர பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தல், அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை

    தேர்தல் ஆணைய தகவல்களின்படி,

    பாஜக – 5

    பகுஜன் சமாஜ் – 2

    சமாஜ்வாடி – 2

    காங்கிரஸ் – 1

    தொகுதிகளில் முன்னிலை பெற்று விளங்குகின்றன.

  20. மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டமன்றத் தேர்தல், பாஜக முன்னிலை

    மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 161 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

    ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.