ரொட்டி செய்யும் போட்டி நடத்தும் அரசுப்பள்ளி

மகாராஷ்டிர மாநிலம் ஜத் மாவட்டத்தில், மாணவர்களுக்கு ரொட்டி செய்யும் போட்டியும் மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியும் நடத்தி வருகிறது ஒரு அரசுப்பள்ளி.

இந்த கிராமம் ஒரு வறண்ட பகுதி. கரும்பு வெட்டுவது உள்ளிட்ட பருவகால வேலைகளுக்காக இந்த குழந்தைகளின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களுக்கு சென்று விடுவர்.

"இதற்கு முன்பு, பெற்றோர்கள் வேலைக்காக புலம்பெயர்வதால் இந்தக் குழந்தைகளின் படிப்பும் பாதியில் நிற்க வேண்டி இருந்தது. இப்போது பெரும் நன்மை என்னவென்றால், இந்தக் குழந்தைகள் தங்களுக்கான உணவை சமைத்துக் கொள்ளப் பழகியதால் அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம்.

இப்போது எந்தக் குழந்தையும் பெற்றோரின் புலம்பெயர்வால், பள்ளியில் இடைநிற்காது. ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களுக்கு சமைக்க தெரிய வேண்டும். இந்த போட்டியின் இன்னொரு நோக்கம், பாலின சமத்துவத்தை கொண்டுவருவதும்தான்" என்கிறார் இந்தப் பள்ளியின் ஆசிரியர் பக்தராஜ் கர்ஜே.

மொத்தத்தில், ஆண் பெண் பேதமற்று சமமாக பொறுப்புகளை சுமக்க இந்த கிராமத்தின் அடுத்த தலைமுறை தயாராகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: