டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் மரணம்

டாடா குழுமத்தின் முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்திரி மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தொழில் மேலாண்மைப் படிப்பை லண்டன் வர்த்தகப் பள்ளியில் பயின்றவர். 1991 இல் ஷபூர்ஜி பல்லோன்ஜி & நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கிய சைரஸ் மிஸ்திரி 1994 இல் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இவரது தலைமையின் கீழ் செயல்பட்ட ஷபூர்ஜி பல்லோன்ஜி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனம் அந்த ஆண்டில் பெரும் லாபம் ஈட்டியது. குறிப்பாக இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 2கோடி பவுண்டுகளில் இருந்து சுமார் 150 கோடி பவுண்டுகளாக அதிகரித்தது.

இந்த நிலையில், சாலை விபத்தில் இன்று மதியம் 3.15மணியளவில் அவர் உயிரிழந்ததாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணை தெரிவித்துள்ளது. யார் இந்த சைரஸ் மிஸ்திரி என்று விளக்குகிறது இந்தக் காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: